fbpx

Edappadi Palaniswami | ’போதைப் பொருள் விற்பனை மையமாக மாறிய தமிழ்நாடு’..!! விளாசிய எடப்பாடி..!!

Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் இருப்பதால் அதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறியுள்ளது. போதைப் பொருள் நடமாட்டத்தை திமுக அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

Read More : Sarathkumar | தேர்தல் நேரத்தில் பரபரப்பு..!! பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்..!!

Chella

Next Post

CAA| "தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது" - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி.!

Tue Mar 12 , 2024
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை(CAA) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் முதல் இதற்கு எதிராக நாடெங்கிலும் பலத்தை எதிர்ப்பு கிளம்பியது. தலைநகர் டெல்லியில் ஷாஹீன்பாக் பகுதியில் மிகப் பெரிய போராட்டம் ஏற்பட்டதோடு நாட்டின் […]

You May Like