fbpx

Edappadi Palaniswami | ”போதை மாபியா தலைவனை ஊக்குவிக்கும் விடியா திமுக அரசு”..!! ஸ்டாலினை விளாசிய எடப்பாடி..!!

போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ”தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே – இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.

மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ADMK | இந்தியா கூட்டணியில் இணையும் அதிமுக..? எடப்பாடி பக்கம் சாயும் காங்கிரஸ்..? அதிர்ச்சியில் திமுக..!!

Chella

Next Post

OPS | ’வசமாக சிக்கிய ஓபிஎஸ்’..!! ’வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Fri Mar 1 , 2024
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓபிஎஸ், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் ஆகியோர் மீது […]

You May Like