fbpx

’எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்’..!! ஈபிஎஸ்-ஐ பார்த்து குரல் எழுப்பிய நபர்..!! வைரல் வீடியோ..!!

மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவர் தன்னுடன் விமான நிலைய பேருந்தில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வெளியே வரும் பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி தம்முடன் பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது “திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசினார்.

தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காண்பித்தார் எடப்பாடி பழனிசாமி. “சின்னமாவுக்கு துரோகத்தை பண்ணியவர், 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உடன்வந்தவர் அவரது செல்போனை பறித்தார். பின்னர் ராஜேஷை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ், சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் எடப்பாடி பழனிசாமியின் அருகில் நின்று லைவ்வில் விமர்சித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sun Mar 12 , 2023
மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு கியூட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பலர் விண்ணப்பிக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. 2023இல் கியூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் […]

You May Like