வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை நிறுவனம் கொண்டு வர உள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜை திறக்க வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி பிடித்தால் எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம். இந்த அம்சம் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.