காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு நாள்தோறும் மாலை வேளையில் சென்று இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்புகின்றனர்.
இத்தகைய நிலையில்தான் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுத்து சுழற்சியின் காரணமாக, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடலோர மாவட்டமான காரைக்காலில் நேற்று இரவு பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை உண்டாக்கியது அதேபோல இன்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
காரைக்கால் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணியர் கடற்கரைக்கு சென்று வந்தனர். மழை பெய்த நிலையிலும் இவர்கள் அதனை பொறுக்காமல் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மழை இல்லை என்றாலும் பரவலாக லேசான மழை ஒட்டுமொத்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.