fbpx

சமூக வலைதள பயன்பாட்டை குறைத்ததன் எதிரொலி!… இளைஞர்களிடையே ஏற்பட்ட மாற்றம்!… ஆய்வில் புதிய தகவல்!…

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் பயன்பாடுட்டை குறைத்தவர்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் இருந்து 15 சதவிகிதம் முன்னேற்றம் கண்டதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஜர்னல் ஆப் டெக்னாலஜி இன் பிஹேவியர் சயின்ஸில் வெளியிட்ட ஆய்வில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக பயன்பாட்டை குறைத்தவர்கள் குறைவான சளி, காய்ச்சல் மருக்கள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு செயல் பாட்டில் 15 சதவிகிதம் முன்னேற்றம் கண்டதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில் 50 சதவிகிதம் வரை அவர்களின் தூக்கத்தின் தரம் உயர்ந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் 30 சதவிகிதம் அவர்களது மனச்சோர்வு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்கள் தங்களின் சமூக வலை தள பயன்பாட்டை குறைக்கும் போது பல வழிகளில் அவர்களின் வாழ்க்கை மேம்படக்கூடும் என்பதை இந்த தரவுகள் உறுதி செய்துள்ளது. உடல் ஆரோக்கியம் மட்டும் இல்லாமல் உளவியல் நல்வாழ்விற்கான நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்க வழி வகுக்கிறது. இது அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் பில் ரீட் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் பெரும்பாலும் மக்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களை பயன்படுத்தி கொண்டு இருப்பவர்களுக்கு கவலை , மனச்சேர்வு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வில் சில வாரங்களுக்கு தங்கள் சமூக ஊடக பயன்பாட்டை 50 சதவிகிதம் குறைத்த பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் உடல் எடை மற்றும் ஒட்டு மொத்த தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது தெரிய வந்துள்ளது.

Kokila

Next Post

வாகன ஓட்டிகள் 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும்...! வந்தது அதிரடி உத்தரவு...!

Sat Mar 11 , 2023
சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும். இது குறித்து தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ தனது செய்தி குறிப்பில்; நடப்பு காலாண்டு 31.03.2023 -க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டிய கடைசி நாள்‌ வருகின்ற 30.03.2023 ஆகும்‌. இது தொடர்பாக அனைத்து வாகன […]

You May Like