தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கான விருப்ப மனு நாளை விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம். நாளை மறுநாள் தமிழக பாஜகவின் புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.
மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 வருடங்கள் பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர்கள் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இருக்கும் எவரும் பாஜக தலைவர் பதவிக்கு விருப்ப மனு வழங்கலாம். இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.