Election: வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு(VCK) பானை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதிமுகவிற்கு(MDMK) பம்பரம் சின்னத்தை வழங்க மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் வருடம் பாராளுமன்ற தேர்தல்(Election) வர இருக்கின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மதியம் 3 மணி வரை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இன்றும் நாளையும் வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்படும். மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்குரிய கடைசி நாளாகும்.
அதன் பிறகு வேட்பாளர்களின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு 1400 க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 67 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவை தவிர நாமக்கல் ராமநாதபுரம் தூத்துக்குடி ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .
மொத்தம் பதிவு செய்யப்பட்ட 1400 வேட்பாளர்களில் 150 பெண்கள் வேட்பம் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்களது வேர்ப்பு மனுக்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் சரி பார்க்கப்படும். வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்குரிய கடைசி நாளாகும். அடுத்த இரண்டு நாட்களில் வேட்பு மனுவில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த வருடத்திற்கான பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுடன் கூடிய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியினரின் கரும்பு விவசாயி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அதனை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் அவர்கள் கேட்ட சின்னத்தை வழங்கவில்லை. மதிமுக(MDMK) கட்சி பம்பரம் சின்னத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும்(VCK) அவர்கள் கேட்ட பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. இந்தியா கூட்டணி கட்சியினருக்கு அவர்கள் கேட்ட சின்னத்தை வழங்க மறுக்கும் தேர்தல் ஆணையம் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு அவர்கள் கேட்ட குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்களை வழங்கி இருக்கிறது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுங்கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.