fbpx

Election 2024 | “எலக்சன் கமிஷனே ஒரு நாடக கம்பெனி தானே”… பிரச்சாரத்தில் கொந்தளித்த சீமான்.!!

Election 2024: தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்படுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் வருட பொதுத்தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறது.

தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தொகுதியை சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற கட்சியின் கொள்கை அடிப்படையில் 20 தொகுதியில் ஆண்களும் 20 தொகுதியில் பெண்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தல்களில் போதிய அங்கீகாரம் பெறவில்லை எனக் கூறிய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்தை பறித்துக் கொண்டது. மேலும் நீண்ட நாட்கள் சீமானுக்கு சின்னம் கொடுக்காமல் தற்போது மைக் சின்னத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான் தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்படுகிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.

வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுப்பவர்களை விட்டுவிட்டு தங்களது சொந்த பணத்தை தேவைகளுக்காக எடுத்துச் செல்லும் அப்பாவி மக்களை கைது செய்து தேர்தல் ஆணையம் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு இருக்கிறார். தேர்தலை நியாயமாக நடத்த நினைப்பவர்கள் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் தேர்தல் வாக்கு இயந்திரத்தை கண்டுபிடித்த ஜப்பான் நாடே அந்த மிஷினை பயன்படுத்தவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இந்தியாவில் மோடி பயன்படுத்தி வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

Reading More: டீ, காஃபி குடிக்கும்போது மாத்திரையை எடுத்துக் கொள்கிறீர்களா..? பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

Next Post

தேனியில் நடந்த குழந்தை திருமணம்! காதல் கணவன் மாயம்... புதுப்பெண் திடீர் முடிவு!

Thu Apr 4 , 2024
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் தனது உறவினரான போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பெங்களூர் இஸ்ரோ மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான மணிவாசகத்தின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, ஜோதிடர் சுரேஷின் 19 வயது மகள் ஹேமலதாவிற்கும், மணிவாசகத்தின் மகன் சந்துருவிற்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, காதலர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 […]

You May Like