காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை முன்னிட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர் அட்டை அளிக்கப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், QR Code கொண்ட வாக்காளர் அட்டை தயாராக இருப்பதாகவும், வாக்காளர் அட்டைகள் நாளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த தகவலானது வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வரலாற்றில் வாக்காளர் அட்டை முதன் முறையாக அளிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் முறையாக நடத்தப்படும் என்று தேர்தல் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.