fbpx

Election | ’கட்சி தாவிய விஜயதரணி’..!! விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பதவி விலகியதால், இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் விளவங்கோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 27ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதியும், திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதியும் கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Election Breaking | ‘சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணம் எடுத்துச் செல்ல தடை’..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Chella

Next Post

Lok Sabha 2024 | அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.! பொதுமக்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகள் பட்டியல்.!

Sat Mar 16 , 2024
இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வாக்குப்பதிவு நடைபெறும் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி ஆகியவற்றை பற்றிய […]

You May Like