fbpx

தமிழகமே…! நாளை வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்…! தலைமை தேர்தல் ஆணையர் தகவல்…!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளை வரை அமலில் இருக்கும். அதன் பிறகு விலக்கி கொள்ளப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசியதாவது; மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சி எடுப்பார்கள். இல்லாவிட்டால் அந்த இயந்திரங்கள், ஒதுக்கி வைக்கப்பட்டு, அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் அந்தக் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட விவிபாட் பதிவுகள் எண்ணப்படும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான எந்தவித புகார்களும் அரசியல் கட்சிகளால் தரப்படவில்லை. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடிவுகள், ஒவ்வொரு சுற்றிலும் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இறுதி செய்யப்பட்ட விவரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின் முடிவு விவரங்களை, தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரிடம் அளிப்பார். தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும் என சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

"ஸ்டாலினுக்கு, மோடிக்கு வாழ்த்து இல்லை"!! ஆந்திர தலைவர்களுக்கு மட்டும்தான்!! வாழ்த்துவதில் நடிகர் விஜய் ட்விஸ்ட்

Wed Jun 5 , 2024
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 2 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி உள்ளன.மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது பாஜக கூட்டணி 289 இடங்களையும் ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் 235 தொகுதிகளையும் பெற்றுள்ளன.அதேபோல் ஆந்திராவில் […]

You May Like