fbpx

ELECTION 2024: பாஜகவுக்கு இடியை இறக்கிய சர்வே முடிவு.! அண்ணாமலை மீது அதிருப்தி.!

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் தங்களது பலத்தை சரி பார்த்துக் கொள்ள அரசியல் கட்சிகள் சர்வே எடுத்து வருகிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வடமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கிறது. எனினும் அந்த கட்சியால் இந்தியாவின் தென் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைமையும் மோசமாகவே இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டதால் கோவையில் மட்டும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த மாதிரியான ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் சர்வே நடத்தியது. இந்த சர்வே முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால் அந்தக் இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகள் பெரும் என்பது மட்டும் ஒரு ஆறுதலாக அமைந்திருக்கிறது. தனியாக போட்டியிட்டால் பாரதி ஜனதா கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது. இதனால் அந்த கட்சியின் மேலிடம் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை மீது கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

English Summary: BJP is upset over the election survey in tamilnadu. The head quarter is really displeased with annamalai perormance.

Next Post

அக்பர், SITA பெயர்களை மாற்ற மாநில அரசுக்கு உத்தரவு.! "வன விலங்குகளுக்கு மத பெயர்கள் வேண்டாம்" - கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுரை.!

Thu Feb 22 , 2024
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு திரிபுரா மாநிலத்தின் செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து 7 வயது உள்ள ஆண் சிங்கமும் 6 வயது உள்ள பெண் சிங்கம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா(SITA) என்றும் பெயரிட்டுள்ளனர். மேற்கு வங்கத்திற்கு கொண்டுவரப்பட்ட 2 சிங்கங்களும் ஒரே கூண்டில் அடைத்து வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்து பரிசத் அமைப்பினர் கடும் […]

You May Like