fbpx

நெருங்கும் தேர்தல்..!! தளபதி விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாரே..?

நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் அனைத்தும், விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதாவது, நடிகர் விஜய் தலைமையில் மக்கள் இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இவர் மேற்கொண்டு வரும் சந்திப்புக்களும் அரசியல் குறித்த எண்ணமாகவே பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் இன்று பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தக் கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியலுக்கான அடுத்தகட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

”நீங்க பண்ண வரைக்குமே போதும்.. ஆள விடுங்க சாமி”..!! கமலிடம் இருந்து தப்பித்துக் கொண்ட பிக்பாஸ் குழு..!!

Sat Sep 9 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 7-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் பலமே நடிகர் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கும் விதம், போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் கொடுக்கும் முறை என ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அடுத்தவாரம் கமல் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஒரு ஆவலை ஒவ்வொரு வாரமும் ஏற்படுத்துவதாலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீசனில் என்றும் இல்லாத அளவுக்கு ஒரு புதுமையை கொண்டுவரும் முயற்சியில் பிக்பாஸ் […]

You May Like