விழுப்புரம் மாவட்டத்தில் சார்ஜ் ஏற்றிய போது எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாக மின்சாரத்தில் இயங்கும் இ-பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவம் தொடர் கதையாகி உள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக் விபத்துகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தாண்டு வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்தது.
இந்த விபத்தில், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய வாகனங்கள் உட்பட பத்திற்க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியது. இதே போல கடந்த ஏப்ரல் மாதம் ஓசூரில் எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், செப்டம்பர் மாதம் விக்ரமசிங்கபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியதால் வீட்டினர் அலறியடித்து ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சார்ஜ் ஏற்றிய போது எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் அவரது பைக்கை சார்ஜில் போட்ட நிலையில், சிறிது நேரத்தில் பைக் தீ பிடித்துள்ளதாக எரிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் எலக்ட்ரிக் பைக் வைத்திருப்போர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.