fbpx

மின்சார ரயில் சேவைகள் நாளை முழுவதுமாக ரத்து..!! எந்த வழித்தடத்தில் தெரியுமா..? மாற்று ஏற்பாடு என்ன..?

சென்னை மின்சார ரயில்கள் ரத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையை அடுத்த தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செப்.14) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரங்களில் பயணிகளின் வசதிக்காக 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் இடைவெளியில் சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.35 மணிக்கு முதல் சிறப்பு ரயில் புறப்பட்டு 9.25 மணிக்கு பல்லாவரம் சென்றடையும்.

இவ்வாறு 32 மின்சார ரயில் சேவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்படும். கடைசி ரயில் பல்லாவரத்தில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.25 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். பிறகு வழக்கமான மின்சார ரயில் சேவை நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’உங்களை அனுமதித்தால் என் வேலை போயிடும்மா’..!! தேர்வெழுத தாமதமாக வந்த மாணவியிடம் கெஞ்சிய போலீஸ்..!!

English Summary

Electric train services between Chennai Beach and Tambaram are completely cancelled.

Chella

Next Post

நைட் டைம்.. கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர்..!! அலேக்கா தூக்கிய போலீஸ்.. என்ன ஆச்சு?

Sat Sep 14 , 2024
The professor who contacted the student at night in Nella Palayankota College and invited her to drink alcohol was arrested.

You May Like