fbpx

இன்று மின்சார ரயில்கள் இயங்கும்..!! ஆனால், இந்த பகுதிகளுக்கு மட்டும்தான்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

கடந்த இரு தினங்களாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சார விநியோகம் இல்லை. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விமான நிலையமும் மூடப்பட்டது. அனைத்து மின்சார ரயில்களும் கடந்த இரு தினங்களாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் மின்சார ரயில்கள் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை சூழ்ந்திருந்த வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், படிப்படியாக வெள்ளம் வடிந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள புறநகர் ரயில் சேவையை இன்று தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றன. தாம்பரம், பேசின் பிரிட்ஜ், கோபால்சாமி நகர் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னை புறநகர் ரயில்கள் நேற்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை- திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் ரயில்களின் சேவை தொடங்கியது. திருவொற்றியூர்-கும்மிடிப்பூண்டி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chella

Next Post

வேறு ஒருவர் பெயரில் உள்ள சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களா?… புதிய ரூல்ஸ் போட்ட அரசு!… உடனே இத பண்ணிடுங்க!

Wed Dec 6 , 2023
நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரமான எரிவாயு இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து இலவச சிலிண்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதன் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் சிலிண்டர் மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர் வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுளது. இதற்கான பணிகள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடக்கிறது. சிலிண்டர் இணைப்பில் ஆதார் […]

You May Like