fbpx

தேனீக்களில் இருந்து மின்சாரமா!… நம்ப முடியலையா ? வாங்க ஆய்வு முடிவுகள் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்…

தேனீக்களால் தேனை மட்டும்தான் சேமிக்க முடியும் என்றுதான் நாம் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் தேனீக்கள் கூட்டமாகப் பறந்தால் அது மின்சாரத்தை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேனீக்களில் இருந்து மின்சாரமா!...நம்ப முடியலையா ? வாங்க ஆய்வுகள்  சொல்வது என்னன்னு பார்க்கலாம்...

தேனீக்கள் கூட்டமாகப் பறக்கும் போது மின்சாரம் எப்படி உண்டாகிறது..?

பூமியில் வாழும் பல உயிரினங்கள், சுற்றுச்சூழலில் உள்ள நிலையான மின்சாரப் புலங்களை எப்படிப் பயன்படுத்துகின்றன என, பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின், உயிரியலாளர்கள் குழுவினர் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இதுகுறித்து சிஎனென் ஊடகத்திடம் தெரிவித்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயிரியலாளர் எல்லார்ட் ஹன்டிங் (Ellard Hunting), ஒரு மலரில் கூட மின்சாரப் புலங்கள் இருக்கும், அதை தேனிக்களால் உணர முடியும் என தெரிவித்திருக்கிறார். ஒரு மலரில் ஒரு தேனீ அமர்ந்து தேனை உறிஞ்சிக் கொண்டது என்றால் அந்த மலரின் மின்சாரப் புலம் மாறிவிடும் என தெரிவித்த அவர், அதை வைத்து தேனீக்கள் மலர்களில் தேன் இருக்கிறதா இல்லையா?, ஏற்கனவே ஏதாவது தேனீ அம்மலரில் இருந்த தேனை உறிஞ்சிக் கொண்டதா? என்பதை உணர்ந்து கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எப்படி?

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துக்கு அருகே வானிலை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த போது, மின் புலங்களையும் ஓர் அளவையாக வைத்திருந்தார்கள். அப்போது எந்தவித புயலுக்கான சமிக்ஞைகள் இல்லாத போதும், வளிமண்டலத்தில் உள்ள மின் புலங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அக்கருவிகளுக்கு அருகிலேயே சுமார் 3 தேனீ கூட்டங்கள் கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு பறந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மீட்டருக்கு 100 வோல்ட் முதல் 1000 வோல்ட் வரை மின்சாரம் உருவானதை மின்சாரப் புலங்கள் அளவிடும் கருவிகளில் பதிவாயின. அதோடு, தேனீக்கள் ஸ்வார்மிங் செய்யும் போது எத்தனை நெருக்கமாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அதிகமாக மின்சாரம் உண்டாவதையும் அக்குழு கண்டுபிடித்தது. பூச்சிகள் கூட்டமாகப் பறக்கும் நிகழ்வை ஸ்வார்மிங் (Swarming) என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

பொதுவாக தேனீக்கள் பறக்கும் போது, மின்சாரம் உண்டாகும், ஆனால் அதை எவரும் அளவிட்டது இல்லை. அப்படியே அளவிட்டு இருந்தாலும், இத்தனை அதிக அளவுக்கு மின்சாரம் உருவானதாக எவரும் குறிப்பிடவில்லை என்கிறார் உயிரியலாளர் ஹன்டிங்.

Kokila

Next Post

’இந்த தேதியில் நான் இறந்துவிடுவேன்’..!! உயிரோடு இருக்கும்போதே நினைவு நாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சர்..!!

Sun Dec 18 , 2022
ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034ஆம் ஆண்டில் உயிரிழந்துவிடுவேன் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால், இந்தாண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பலரையும் […]
’இந்த தேதியில் நான் இறந்துவிடுவேன்’..!! உயிரோடு இருக்கும்போதே நினைவு நாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சர்..!!

You May Like