தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி முடிவு எடுப்பதற்குத் தடை விதித்து, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மின்வாரியம் சார்பிலும், எதிர்தரப்பினர் சார்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பின்னர், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.