fbpx

ட்விட்டர் ஊழியர்களை வீட்டிலிருந்தே கழிப்பறை காகிதங்களை கொண்டுவர சொன்ன எலான் மஸ்க்..!! ஏன் தெரியுமா..?

ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தில் வாடகை செலுத்துவதைத் தவறவிட்ட எலான் மஸ்க், அதன் 4 தளங்களை மூடிவிட்டு அனைத்து ஊழியர்களையும் 2 தளங்களுக்கு மாற்றியுள்ளார். குறுகிய இடங்களுக்குள் அதிக ஊழியர்கள் இருப்பதால், மீதமுள்ள உணவு மற்றும் உடல் துர்நாற்றத்தின் வாசனை அலுவலகங்களில் நீடித்தது என பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

ட்விட்டர் ஊழியர்களை வீட்டிலிருந்தே கழிப்பறை காகிதங்களை கொண்டுவர சொன்ன எலான் மஸ்க்..!! ஏன் தெரியுமா..?

மேலும், குளியலறைகள் அசுத்தமாகிவிட்டன. துப்புரவு சேவைகளையும் நிறுத்திவிட்டதால், சில ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதங்களை வீட்டிலிருந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எலான் மஸ்க்கிடம் இது உண்மையா என்று ட்விட்டரில் கேட்டதற்கு, அவர் “BYOTP! ஐயோ, அரை நாள் இது உண்மையாக இருந்தது என்று பதில் கூறினார்.

Chella

Next Post

பறந்து வரும் பார்சல்..!! ட்ரோன்கள் மூலம் டோர் டெலிவரி..!! அமேசானின் அசத்தல் ஐடியா..!!

Sat Dec 31 , 2022
அமேசான் நிறுவனம் தற்போது ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை டெலிவரி செய்யும் பணியை தொடங்கியுள்ளது. விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். அந்தவகையில், அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் […]
பறந்து வரும் பார்சல்..!! ட்ரோன்கள் மூலம் டோர் டெலிவரி..!! அமேசானின் அசத்தல் ஐடியா..!!

You May Like