fbpx

SpaceX நிறுவனத்திற்காக ஒரு கிராமத்தையே அழித்த எலான் மஸ்க்.. கடும் அதிருப்தியில் மக்கள்..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய, கடலோர கிராமமான போகா சிகாவில் (Boca Chica) ,வசிப்பவர்கள், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மீது அதிருப்தியில் உள்ளனர்.. 2014 ஆம் ஆண்டில் விண்வெளிப் பயணிகளின் ஏவுதளத்தில் தரையிறங்கியபோது, அந்த நகரத்தை டெரஸ்ட்ரியல் டெர்மினஸாக மாற்றுவதாக ஸ்பேஸ்எக்ஸ் உறுதியளித்தது. மெக்சிகன் எல்லையில் உள்ள ரியோ கிராண்டேயின் முகப்பில் உள்ள ஒரு சிறிய, கடலோர கிராமமாக போகா சிகா இருந்தது..

இந்த கிராமத்தை விண்வெளிப் பயணிகளுக்கான நிலப்பரப்பு முனையமாக மாற்றுவதாக ஸ்பேஸ்எக்ஸ் உறுதியளித்தது. திட்டப்பணிகள் முன்னேறியதால், சில வீட்டு உரிமையாளர்கள் வெளியேறினாலும், போகா சிகா கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளை ஸ்பேஸ்எக்ஸ் படிப்படியாக வாங்கியது.

எனினும் யாரையும் கலந்தாலோசிக்காமல் எலான் மஸ்க் கிராமத்தை கையகப்படுத்தியதாகவும், அதற்கு ஸ்டார்பேஸ் என்று பெயர் மாற்றியதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பிரவுன்ஸ்வில்லியைச் சேர்ந்த மேரி ஹெலன் புளோரஸ் இதுகுறித்து பேசிய போது “ இது ஒரு சிறிய கிராம்.., எலோன் மஸ்க் வந்து அதை எடுத்துக் கொண்டார். யாரிடமும் கேட்காமல் ஸ்டார்பேஸ் என்று பெயர் மாற்றினார். எல்லை நகரத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை..

அவர்கள் ஏவுதளத்தை மண்மேடு கோட்டிற்குப் பின்னால் வைப்பதை நான் பார்த்தபோது அது எங்கள் கடற்கரைக்கு பேரழிவை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிந்தேன்.. உலக பெரும் பணகாரர்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை அழிக்கிறார்கள்.. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுற்றுச்சூழலை அழித்து வருகிறது.. இதனால் கடல் ஆமை மரணங்களை ஏற்படுத்துகிறது..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

மஸ்தான் கொலை வழக்கு..!! மீண்டும் திருப்பம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய குடும்பம்..? திடுக்கிடும் பின்னணி..!!

Mon Feb 20 , 2023
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான் (66). 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், திமுகவில் இணைந்த […]

You May Like