போர்ப்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ளது, அதன்படி இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ, எலான் மஸ்க்-ஐ பின்னுக்கு தள்ளி எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட், 191 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 73ஆகும்.
கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவின் காரணாமாக, 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் 171 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் 133 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அதானி மூன்றாம் இடத்திலும், 115 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெஸாஸ் 4ஆம் இடத்திலும், 108 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன்வாரன் பபட் 5ஆம் இடத்திலும் உள்ளனர்.