fbpx

அரசின் முடிவுகளில் தலையிடும் எலான் மஸ்க்..!! உயிருக்கே ஆபத்து..!! கதறும் தந்தை..!! என்ன நடந்தது..?

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலகின் நம்பர் 1 கோடீஸ்வரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். இந்நிலையில், எலான் மஸ்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார். அதனைத் தொடர்ந்து அடிக்கடி தனது அதிரடி முடிவுகளால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபலமான “தி நியூயார்க்கர்” எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என்ற கட்டுரையில், அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதள கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது” என செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், “எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்” என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாதுகாவலர்கள் புடை சூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் தளத்தின் நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

#BREAKING: செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதல்ல - உயர்நீதிமன்றம் கருத்து..! முதல்வருக்கே அதிகாரம்…!

Tue Sep 5 , 2023
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராக தொடர பலனும் இல்லை என்று கருத்து. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வருவதற்கு எதிராக ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

You May Like