fbpx

“விரைவில் ரோபோ டாக்சி சோதனை ஓட்டம்” எலான் மஸ்கின் அடுத்த அதிரடி..!

டெஸ்லாவின் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் பேக்கேஜை சீனாவில் ரோபோ டாக்ஸிகளில் நிறுவி சோதனை செய்ய எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெஸ்லா CEO எலான் மஸ்க் கூறுகையில், தனது நாட்டில் ரோபோ டாக்ஸிகளை பரிசோதிக்குமாறு டெஸ்லாவை சீனா வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.

சீன அரசு அதிகாரிகள் ரோபோ டாக்ஸியின் ஃபுல் செல்ஃப் டிரைவிங்- எப்எஸ்டி இயக்கத்துக்கு உடனடியாக அனுமதி அளிக்கவில்லை. எப்எஸ்டி இயக்கத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு முன்பாக டெஸ்லாவின் கார்களில் டிரைவர் அசிஸ்டென்ஸ் அம்சங்களை பரிசோதித்து உரிய டேட்டாக்களை சேகரித்து அனுமதி பெற வேண்டும். ஷாங்காயில் ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்த டெஸ்லா அனுமதி கோரியுள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து டெஸ்லாவும் ஷாங்காய் நகர அரசும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த மாதம் சீன ப்ரீமியர் லீ ஜியாங்குடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் இந்த ரோபோ டாக்ஸி அறிவிப்பை வெளியிட்டார். தனது சீன பயணத்தின்போது எப்எஸ்டி இயக்கம் குறித்து விவாதிக்க இருந்ததாகத் தெரிகிறது. உரிய அரசு அனுமதிகளைப் பெற்று டேட்டா டிரான்ஸ்பர் செய்யப்பட்டால் அது மஸ்க்கின் திட்டத்துக்கு ஏதுவாக இருக்கும்.

டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் ஒய் கார்களில் டேட்டா செக்யூரிட்டி ஒழுங்குமுறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் டெஸ்லா கார்களை சீனாவின் பல்வேறு பகுதிகளில் அனுமதிக்க லோக்கல் அரசுகளுக்கு வழிவகுக்கும். இதற்கு முன்பு இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பைடுவுடன் டெஸ்லா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் சீனாவின் மிகப் பெரிய டெக் நிறுவனத்தின் மேப்பிங் லைசன்ஸை வைத்து சீனாவின் பொது சாலைகள் பற்றிய டேட்டாக்களை பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து எப்எஸ்டி இயக்கத்துடன் கூடிய ரோபா டாக்ஸிகளை டெஸ்லா சீனாவில் இயக்க முடியும்.

Next Post

"கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பாதிப்பில்லை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

Sun May 12 , 2024
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் […]

You May Like