fbpx

வங்கிக்கடன் வாங்கியவர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.. எஸ்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..

எஸ்பிஐ வங்கி, வட்டி விகித்ததை உயர்த்தியுள்ளதால், வங்கிக் கடனாளிகளுக்கு EMI தொகை உயர உள்ளது..

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி, பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை வட்டி விகிதத்தையும் 8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக பாரத் ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வட்டி விகித உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இப்போது பெரும்பாலான வங்கிகள் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் அல்லது ரெப்போ அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன. வங்கி பி.எல்.ஆர். மற்றும் அடிப்படை விகிதம் இரண்டையும் காலாண்டு அடிப்படையில் திருத்துகிறது. எஸ்பிஐ-யின் கடன் வட்டி விகித திருத்தம் வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் பின்பற்றப்படும்….

Maha

Next Post

முதலிரவில் பதறி அடித்து ஓடிவந்த புதுப்பெண்..! முதல் நாளே மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!

Fri Sep 16 , 2022
முதலிரவின் போது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வந்தவர் துளசி பிரசாத் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் (23) காதல் திருமணம் நடைபெற்றது. எளிய முறையில் திருமணம் நடைபெற்றதை அடுத்து, மணமகள் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக துளசி பிரசாத் தனது மாமியார் வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரம் உறவினர்களுடன் பேசிவிட்டு பின்னர் துளசி […]
முதலிரவில் பதறி அடித்து ஓடிவந்த புதுப்பெண்..! முதல் நாளே மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!

You May Like