பிரபல எழுத்தாளரும், பழம்பெரும் அரசியல் தலைவர் பிஜு பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தா காலமானார். அவருக்கு 80 வயது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரி கீதா. அவர் பிரபல அமெரிக்க வெளியீட்டாளர் சோனி மேத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார், கணவன் டிசம்பர் 2019 இல் காலமானார். இந்த நிலையில் உடல் நல குறைய காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதா மேத்தா காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் பிஜு மற்றும் கியான் பட்நாயக் ஆகியோருக்கு 1943 இல் பிறந்த கீதா, இந்தியாவிலும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் தனது கல்வி படிப்பை முடித்தார். தி எடர்னல் கணேஷா உள்ளிட்ட பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
கீதா மேத்தா குறைந்தது 14 தொலைக்காட்சி ஆவணப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். அவர் அமெரிக்க தொலைக்காட்சி நெட்வொர்க் என்பிசியின் தொலைக்காட்சி பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.