இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும்.
குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை அலுவலகம் அல்லது நாடு முழுவதும் உள்ள 135 கிளை அலுவலகங்களுக்கு அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளது.
எப்படி குறைகளை பதிவு செய்து என்பதை பார்க்கலாம்?
- முதலில் https://epfigms.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘குறைகளைப் பதிவு செய்’ என்பதை கிளிக் செய்யவும். பின்னர் பொருந்தக்கூடிய ‘நிலை’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து UAN எண் உள்ளிடவும். பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு, ‘விவரங்களைப் பெறு’ என்பதை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் UAN விவரம் காட்டப்படும் இடத்தில், ‘Get OTP’ பட்டனைக் கிளிக் செய்யவும்.
- OTP ஐ உள்ளிட்டு, பின்னர் “சமர்ப்பி” என்ற ஆப்ஷனை அழுத்தவும். பின்னர் உங்கள் பெயர், பாலினம், தொடர்புத் தகவல், பின் குறியீடு, மாநிலம் மற்றும் நாடு போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.”குறை விவரங்கள்” நெடுவரிசையில் PF கணக்கு எண்ணைக் கிளிக் செய்யவும்.
- புகார் விளக்கத்துடன் புகார் வகையைத் தேர்ந்தெடுக்கவும். “Choose File” மற்றும் “Attach” பொத்தான்களைப் பயன்படுத்தி, புகாரை ஆதரிக்க தேவையான கோப்புகளைப் பதிவேற்றவும். உங்களது குறைகளை உள்ளிட்டு, துணை ஆவணங்களை இணைத்த பிறகு “சேர்” என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் “குறை விவரங்கள்” என்ற பகுதியில் இடுகையிடப்படும். EPFO இல் புகாரைப் பதிவு செய்ய, “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும். புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு, பதிவு எண்ணுடன் EPF சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் SMS அனுப்பப்படும்.
Read more ; அட இது தெரியாம போச்சே!! ரேஷன் கார்டு இருந்தால் போதும் இந்த வேலை உறுதி!!