fbpx

சாதாரண மெயில்தானே என நினைத்த ஊழியர்கள்..!! ரூ.2.61 கோடி அபேஸ்..!! கூட்டுறவு வங்கிக் கணக்கு ஹேக்..!!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்தின் கணக்கை ஹேக் செய்து ரூ.2.61 கோடி பணத்தை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் கடந்த நவம்பர் மாதம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.61 கோடி திடீரென மாயமானது. பின்னர், அவை ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. வங்கிக்கு மெயில் மூலம் ஒரு லிங்கை நைஜீரிய ஹேக்கர்கள் அனுப்பி உள்ளனர். இதைப் பார்த்த ஊழியர்கள் அதை கிளிக் செய்து ஒப்பன் செய்துள்ளனர். அப்போது, ஹேக்கர்களின் மென்பொருள், வங்கியின் கணினியில் பதிவிறக்கம் ஆகியுள்ளது. மேலும், இதை ஏதோ ஒரு மெயில் என சாதாரணமாக நினைத்துக் கொண்டு வங்கி ஊழியர்கள் தவிர்த்துள்ளனர்.

சாதாரண மெயில்தானே என நினைத்த ஊழியர்கள்..!! ரூ.2.61 கோடி அபேஸ்..!! கூட்டுறவு வங்கிக் கணக்கு ஹேக்..!!

அதன் பின் வங்கியில் தங்கள் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டிருப்பதை வைத்து, வங்கியின் கணக்கை ஹேக் செய்த நைஜீரியர்கள், கணக்கில் இருந்து ரூ.2.61 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பணம் மாயமானது குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி உத்தம் நகரில் பதுங்கி இருந்த நைஜீரியர்கள் இருவரை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

பொங்கல் பண்டிகை..!! இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Jan 12 , 2023
13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் […]

You May Like