fbpx

2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! தொழில்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு துறையால் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், பயிற்சிக் காணொளிகள் ஒளிபரப்பும் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது. இதை அனைத்து போட்டித் தேர்வர்களும் பயன்படுத்தி அரசு பணி பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் 100% எட்ட வேண்டும்.

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவதுடன், கிராமப்புற மாணவர்கள் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையிலான திறன் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

விருதுநகர் அருகே....!  15 வயது சிறுமியை, தாயாக்கிய இளைஞர் மீது, போக்சோ சட்டம் பாய்ந்தது....!

Sun Sep 24 , 2023
தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் இடையே சரியான வயது வருவதற்குள் பருவ கோளாறு பிடித்து விடுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள். இதனால், அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வதை விட அவர்களை சுற்றி இருப்பவர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 24 வயது இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவம் குறித்து அந்த […]

You May Like