fbpx

2,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!! முதல்வர் முக.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து..!! எந்த நிறுவனம் தெரியுமா..?

சென்னையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்குமான ரூ.5,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

ரூ.5,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சிறுமியை பட்டினி போட்டு 'கேங் ரேப்' செய்த கொடுமை! 4 இளைஞர்கள் போக்ஸோவில் கைது!

Mon Feb 13 , 2023
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது சிறுமியை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரின்17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டிலிருந்து 3000 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை […]

You May Like