கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர்
கல்வித்தகுதி: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கணினி செயல்திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற பால் பண்ணைகளில் பணி செய்ததற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய தேதி: விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதி காலை 11 மணியளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேரடி தேர்வு நடைபெறும் இடம்: The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd., K.P.Road, Nagercoil – 629 003. , Tamil Nadu .
Email : aavinkk@gmail.com
Tel : 04652 – 230356
Fax: 04652-230785