fbpx

அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலைவாய்ப்பு..!! ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள 2,877 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலமாகத் தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து சேவை இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமமமின்றி, பயணித்து வருகின்றனர். அதுவும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததன் காரணமாக சேவையை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்கும் 2,877 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டிசிசி பணியில் 2,340 காலியிடங்களும், 537 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 769 காலிப்பணியிடங்கள் எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read More : Gold Rate | செம குட் நியூஸ்..!! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

English Summary

Tamil Nadu Government Transport Corporation has released a notification to fill 2,877 vacancies.

Chella

Next Post

திருப்பதி கோயிலில் இந்து ஊழியர்களை மட்டும் நியமிக்க வேண்டும்..!! - தேவஸ்தானத்தின் புதிய தலைவர் அதிரடி

Fri Nov 1 , 2024
Only Hindu Employees to be Appointed at Tirumala Temple: TTD's New Chairman B.R. Naidu

You May Like