இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆபரேட்டர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO)-ல் காலியாக உள்ள ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கல்வித்தகுதி, வேதியியல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றில் பி.எஸ்சி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக் கழகங்களில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு 21 முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IFFCO வேலை வாய்ப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் iffco.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 06/08/2023 ஆகும்.