தமிழக அரசு துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : வட்டார தரவு உள்ளிட்டாளர்
பணியிடம் : திருவண்ணாமலை
காலிப்பணியிடங்கள் : 2
கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்பிடிப்பு அல்லது கணினி பயன்பாடு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாத சம்பளமாக ரூ.13,500 வழங்கப்படும்.
நிபந்தனைகள் :
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படாது.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிப்பது எப்படி..? மேற்கண்ட பணிக்கு என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்று, மதிப்பெண் சான்று நகலை சேர்த்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கௌரவ செயலாளர், துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
மேற்கண்ட முகவரிக்கு 20.11.2024 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.