fbpx

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்..!! டைம் முடிய போகுது.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!! 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

காலிப்பணியிட விவரம்:

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364
மாநில அரசு விரைவு போக்குவரத்து (தமிழ்நாடு) கழகம் – 318
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) – 756
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) – 486
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) – 344
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) – 322
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) – 362
மொத்தம் = 3,274

வயது வரம்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3,274 பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபடியாக ஒசி (OC) பிரிவை சேர்ந்தவர்கள் 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது. பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி (BC/MBC/DNC/SC/ST) பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக தேவை. மேலும், குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ், பேட்ஜ் மற்றும் நடத்துநர் லைசன் ஆகியவை 01.01.2025 தேதியின் அல்லது அதற்கு முன்பு பெற்றிருக்க வேண்டும்.

சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் வயது 24 மற்றும் 18 மாத அனுபவம் தேவை என்ற நெறிமுறை பொருந்தாது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? ஆர்வமுள்ளவர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: போப் மரணம்.. அப்படியே பலித்த பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு.!! இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ..?

English Summary

Employment notification has been issued to fill vacant posts in Tamil Nadu State Transport Corporations.

Next Post

சற்றுமுன்..!! காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை..!! நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Mon Apr 21 , 2025
Nagercoil court has issued a stern order sentencing Killiyur Congress MLA Rajesh Kumar to 3 months in prison.

You May Like