fbpx

நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! சம்பளம் ரூ.1.77 லட்சம் வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில், குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், குறைந்தது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, இந்தி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்படும். பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சலுகை உண்டு. அரசு சேவையின் நிரந்தர அலுவலர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

தேர்வு முறை: சொற்பொழிவு, எழுத்துத் தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய நான்கு அடுக்குகளில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: https://loksabha.nic.in/ → Recruitment → Apply Online என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும்.

Chella

Next Post

ரேஷன் கடை தேர்வு முடிவுகள் என்ன ஆச்சு..? எப்போது வெளியாகும்..!! கசிந்த முக்கிய தகவல்..!!

Fri Mar 10 , 2023
கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், வெறும் நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்பதால், லட்சக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்கான, நேர்காணல் தேர்வு […]

You May Like