fbpx

அடுத்த அதிரடி…..! அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…..!

சென்னை பசுமை வழி சாலையில் இருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர் அமைச்சர் செந்தில் பாலாஜி நடை பயிற்சிக்காக வெளியே சென்று இருந்த நிலையில் அமராக்கத்துறை சோதனையை கேள்விப்பட்டு உடனடியாக அவர் வீட்டிற்கு அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனைக்கு கொடுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதே போல சென்னை அபிராமபுரத்தில் இருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் இருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு மற்றும் ராமகிருஷ்ண புரத்தில் இருக்கின்ற அசோக்குமாரின் வீடு உள்ளிட்ட 4 பகுதிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

Next Post

குரூப் 4 பணியிடங்கள்..!! ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை..!! வெளியான முக்கிய அறிக்கை..!!

Tue Jun 13 , 2023
குரூப் 4 பணியிடங்களை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, 10,117 இடங்கள் என்பதில் இருந்து உயர்த்த வேண்டும் என்ற […]

You May Like