fbpx

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த பொறியாளர்…! விரக்தியில் குளியலறையில் எடுத்த முடிவு..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் 3 லட்சம் ரூபாயை இழந்த துக்கத்தில் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவின் குமார். இவர் பொறியியல் பட்டபடிப்பது முடித்துவிட்டு மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் 3 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பந்தயம் கட்டி இழந்துள்ளார். பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த அவர், சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மொத்த பணத்தையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட கவினின் தம்பி அருகிலிருந்தவர்களை அழைத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சூதாட்டத்த்தில் பணத்தை இழந்த விரக்த்தியில் பொறியாளர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

சிறுமியின் பாதி மூளையை ஸ்லீப் மோடில் வைத்த மருத்துவர்கள்!… மருத்துவ உலகில் வியக்கத்தக்க சாதனை!

Thu Oct 12 , 2023
அமெரிக்காவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியின் பாதி மூளையை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் வியக்கத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக சுகாதார மருத்துவமனை மருத்துவர்கள், ஆறு வயது குழந்தைக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்தனர். சிறுமியின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் அவளது மூளையின் பாதியை உறக்கநிலையில் வைத்தனர். மூளையின் இரண்டு […]

You May Like