fbpx

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு..! இன்றே கடைசி நாள்..! உடனே இதை செய்து விடுங்கள்..!

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முதல் சுற்றுக்கு கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 12,294 மாணவர்கள் பங்கேற்றதில் 9,502 பேருக்கு மட்டுமே இடங்கள் உறுதியாகின. இதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 252 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் 953 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை கடிதம் செப்டம்பர் 15ஆம் தேதி இணையவழியில் வழங்கப்பட்டது.

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு..! இன்றே கடைசி நாள்..! உடனே இதை செய்து விடுங்கள்..!

தற்காலிக சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் 7 நாட்களில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்படும். அதன்படி, முதல் சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 22ஆம் தேதி இன்றுடன் நிறைவுபெறுகிறது. எனவே, மாணவர்கள் கல்லூரிகளிலோ அல்லது அரசு உதவி மையங்களிலோ கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்டம்... நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்..

Thu Sep 22 , 2022
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக விளங்குவது மத்திய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. […]

You May Like