fbpx

”பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு”..! – அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடா்ந்து வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு நடைபெற உள்ளது. பின்னா், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

”பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு”..! - அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். அவா்களில் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்பப் பதிவை முடித்துள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவா்கள் ஆவர்.

Chella

Next Post

எடப்பாடியில் மது விற்பனை அமோகம்..! சட்டையில் தேசியக்கொடியுடன் குடிக்க வந்த குடிமகன்கள்..!

Mon Aug 15 , 2022
சுதந்திர தினமான இன்று எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சுதந்திர தினத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் இன்று (திங்கள்) அதிகாலை முதலே மறைமுக […]
எடப்பாடியில் மது விற்பனை அமோகம்..! சட்டையில் தேசியக்கொடியுடன் குடிக்க வந்த குடிமகன்கள்..!

You May Like