fbpx

பொறியியல் கலந்தாய்வு!… 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது!… புதிய மாற்றங்கள் இதோ!

பொறியியல் கலந்தாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அடுத்ததாக மேற்ப்படிப்பிற்காக விண்ணப்பிக்க தொடங்கி அதற்கான கல்லூரி சேர்க்கை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைகான பணிகள் தொடங்கி நடைபெற ஆரம்பித்து உள்ளது. இதற்கான பொது கலந்தாய்வு ஜூலை 7இல் தொடங்க உள்ளது. சிறப்பு கலந்தாய்வு ஜூலை 2இல் தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக ஒரு லட்சத்து 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த கலந்தாயவில் தற்போது ஓர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அதாவது இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களை எடுத்து இருந்தால் அவர்களுக்கு யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் ஒரு சிக்கல் வரும். அப்போது அவர்களின் கணித பாடம், இயற்பியல் பாடம், வேதியியல் பாடம் ஆகியவற்றை கணக்கிட்டு, அடுத்ததாக பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். அதிலும் சமமாக இருந்தால் அடுத்ததாக யார் முதலில் விண்ணப்பித்து உள்ளார்கள் என்று வரிசையின் அடிப்படையில் அவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் சீட் கொடுக்கப்படும். இதில் பிறந்தநாள் கூட முன்னுரிமை அங்கமாக செயல்படும்.

ஆனால், தற்போது கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நேரத்தில் கொரோனா காலகட்டம் என்பதால் தற்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கொண்டு முன்னுரிமை வழங்கும் அதிகாரம் மட்டும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. ஆதலால் தற்போது ஒரே மதிப்பெண்ணை இரண்டு மாணவர்கள் எடுத்திருந்தால், அவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதிஇயல் பாட மதிப்பெண் மற்றும் ரேண்டம் எண் ஆகியவை மட்டுமே வைத்து முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

மக்களே எச்சரிக்கை!... லேட்டா தூங்கினால் மரணம்தான்!... 37 வருட ஆய்வு முடிவில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Fri Jun 23 , 2023
இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது இரவு நேரங்களில் வேலைகள் பார்ப்பது போன்றவற்றினால் வெகு நேரம் முழித்திருக்கக் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் தாமதமாகவும் எழுந்திருக்கிறோம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரவில் தாமதமாக தூங்குவது பல்வேறு நோய்ககளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, இரவில் அதிகநேரம் முழித்திருக்கும் […]

You May Like