fbpx

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்..!! யார் யாருக்கு எப்போது..? தேதியை நோட் பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ.பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்நிலையில், 2024-2025 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2,53,954 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களில் 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டாா். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா். இதையடுத்து, பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

7.5% உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22ஆம் தேதியும் பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25ஆம் தேதியும் கலந்தாய்வு தொடங்கவுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பயம் காட்டும் நிஃபா வைரஸ்..!! மாரடைப்பால் சிறுவன் மரணம்..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!

English Summary

Higher Education Minister Ponmudi launched the consultation for the admission of engineering students in Tamil Nadu.

Chella

Next Post

கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை..!! - பிரதமர் மோடி வேண்டுகோள்!!

Mon Jul 22 , 2024
Prime Minister Modi has appealed to everyone to cooperate for the smooth conduct of the parliamentary session.

You May Like