fbpx

நாளை முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்..! ஆனால், இன்று இரவுக்குள்..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு, விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். பின்னர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை பொது, தொழிற் பிரிவினருக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இடங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று TNEA (Tamil Nadu Engineering Admission) அறிவித்துள்ளது.

நாளை முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்..! ஆனால், இன்று இரவுக்குள்..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிறப்புப்பிரிவு, பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகியவை முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. கிராமப்புற மாணவர்கள் மாவட்டந்தோறும் உள்ள 110 TFC மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் TNEA அறிவித்துள்ளது. Engineering கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் குறைகள் இருப்பின், இன்று இரவுக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று, இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப் பள்ளி மாணவர்களும் இன்று இரவுக்குள் விண்ணப்பிக்கலாம். https://www.tneaonline.org இணையதளத்தில் குறைகள், திருத்தங்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

Chella

Next Post

பென்சன் வாங்குவோருக்கு அதிர்ச்சி அறிவிப்பு.. ஓய்வூதியம் கிடைக்காது.. விரைவில் புதிய விதி அமல்....

Fri Aug 19 , 2022
அக்டோபர் 1, முதல் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர வருமான வரி செலுத்துவோருக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.. அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், 2015ல் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.. இந்த புதிய […]

You May Like