fbpx

பொறியியல் பணிகள் தேர்வு முடிவுகள்…! வெளியான முக்கிய அறிவிப்பு…!

பொறியியல் சர்வீஸ் தேர்வு 2021-ன் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 28 விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்களை நிரப்பலாம் என மத்திய தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. பின்வரும் 4103068 என்ற பதிவு எண் கொண்ட விண்ணப்பதாரர் மட்டும் உத்தேசப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்களின் நியமனம் தொடர்பான முடிவு உத்தேசமானதாக இருப்பதாகவும், தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு முடியும் வரை முடிவுகள் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிடும் நாள் முதல் அடுத்த 3 மாதங்களுக்கு உத்தேசப்பட்டியல் செயல்பாட்டில் இருக்கும்.

தேவைப்படும் ஆவணங்களை வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கத் தவறினால், தேர்வு செய்யப்பட்டவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இது தொடர்பாக எந்தவொரு தகவல் பரிமாற்றமும் அனுப்பப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Online-ல் தவறாக பணம் செலுத்தி விட்டீர்களா...? உடனே இதை செய்தால் உங்க பணம் திரும்ப பெறலாம்...!

Tue Dec 6 , 2022
இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும். அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். […]
Gpay, PhonePe-க்கு சிக்கல்..!! இனி 30% தானாம்..!! அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி..!! யாருக்கு சாதகம்..?

You May Like