fbpx

இலங்கையை போராடி வீழ்த்தியது இங்கிலாந்து!

சிட்னியில் நடைபெற்ற டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இலங்கை அணியை போராடி வீழ்த்தி இங்கிலாந்து அணிஅறையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகின்றது. அறையிறுதிக்குள் நுழையப்போவது இங்கிலாந்தா? இலங்கையா? என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். எனவே முக்கியமான ஒரு விளையாட்டாக கருதப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்தது.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இங்கிலாந்து. 7 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் இழக்காமல் இருந்தது இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்றே கணிக்கப்பட்டது. பின்னர் 129 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் சுவாரஸ்யமானது.

கடைசியில் 3 பந்தில் 2 ரன்கள் என்று வந்தது. ஒரு பவுண்டரியை அடித்த இங்கிலாந்து வெற்றியை உறுதிசெய்தது. பென்ஸ்டோக்ஸ் நிதானமாகவும் பொறுப்பாகவும் 42 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து மிகச் சிறந்த ஆட்டங்களில் அடுத்தடுத்து நடுவில் சில விக்கெட்டுகளை இழந்தது.

இங்கிலாந்தின் ஜஸ்பட்லர் (28), அலெக்ஸ் (47) ஆகிய இருவர் மூலம் 75 ரன்கள் குவிந்தது. பின்னர் ஹசரங்க் டிசில்வா பந்தை விளாசினார். ஆனால் அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டது. ஹாரி புரூக் 4 ரன்களில் வெளியறே நேர்ந்தது. லியாம் லிவிங்ஸ்டன் அடுத்ததாக, லாஹிரு குமாரா பந்தை ஏதோ மைதானத்துக்கு வெளியே அடிப்பவர் போல் மிக மோசமான பொறுப்பற்ற ஷாட் ஒன்றை ஆட, பந்து மேலே எழும்ப கேட்ச் ஆனது. இங்கிலாந்து 106/4. மொயீன் அலியை இறக்கிவிட்டு, அடி என்றால் அவரோ, 5 பந்துகள் தட்டுத்தடுமாறி ஆடி, 1 ரன் எடுத்து தனஞ்ஜெயா பந்தை ஷார்ட் கவரில் நின்றிருந்த ஷனகாவிடம் கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து வெளியேறினார்.

இந்த போட்டியின் முடிவு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இல்லை. உலக சாம்பியன்- லிருந்து ஆஸி வெளியேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து, பாகிஸ்தான் – வங்கதேசம், இந்தியா – ஜிம்பாப்வே இடையே 3 போட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

’ரஞ்சிதமே’ பாடல் காப்பி அடிக்கப்பட்டதா? நெட்டிசன்கள் ட்ரோல்..

Sat Nov 5 , 2022
’ரஞ்சிதமே’ ’ரஞ்சிதமே’ என்ற வாரிசு படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தின் பாடல் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று சில ட்ரோல்கள் உலவி வருகின்றது. நடிகர் விஜய் பாடி வெளியான பாடல் ’ரஞ்சிதமே’ […]

You May Like