fbpx

கோப்பையை தட்டிச் சென்றது இங்கிலாந்து!!

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச் சென்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் முகமது ஹாரீஸ் 8 ரன்களும் ஷான் மசூத் 38 ரன்களும் இப்டிகார் அகமது பூஜ்யம் ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஷதாப் கான் 20 ரன்கள், முகமது நவாஸ் 5 ரன்களும் முகமது வசீம் 4 ரன்கள், ஷசீன் 5 ரன் எடுத்தனர். ஹரீஸ் ரவுப் 1 ரன் எடுத்து மொத்தமாகவே 137 ரன்கள் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தனது திறமையான ஃபீல்டிங்கால் அதிக ரன்கள் எடுக்காமல் தடுத்தது.

இரண்டாவதாக களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ்பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் பெரிய அளவிலான ரன்கள் இதில் எடுக்கவில்லை. ஜாஸ் பட்லர் 26 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பில்சால்ட் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக் 1 சிக்கர் அடித்து பெரும் நம்பிக்கை கொடுத்தார். ஆனால் 20 ரன்களில் அவர் ஆட்டமிழ்ந்தார்.

பாகிஸ்தானும் திறமையாக ஃபீல்டிங் செய்தனர். இதனால் ரன் எடுப்பதற்கு இங்கிலாந்து திணறியது. இதனால், போட்டி விறுவிறுப்பானது. 15 ஓவர்களுக்கு மேல் பென் ஸ்ட்ரோக் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்தார்.

உடன் விளையாடிய மொயின் அலியும் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள் வழங்கி 19 ரன் அடித்த நிலையில் அவர் போல்ட் அவுட் ஆனார். இலக்கை எட்டுமா என்ற ஆர்வத்தில் மக்கள் ஆரவாரத்துடன் 18.2 ஓவர்களில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நூலிழையில் இங்கிலாந்து இருந்தது. பாகிஸ்தானும் இங்கிலாந்துக்கு ஈடு கொடுத்து ஃபீல்டிங் செய்து வந்தது.

பென்ஸ்ட்ரோக்கின் அதிரடி ஆட்டம் : களத்தில் நுழைந்ததில் இருந்தே பென்ஸ்ட்ரோக் நிதானமாக ஆடி வந்தார். 15 ஓவர்களுக்குப் பின்னர் அவர் அதிரடி ஆட்டத்தை காட்டினர். 5 பவுண்டரிகள் அடுத்தடுத்து அடித்தார். அவர் ஒரு அதிரடி சிக்சரும் அடித்து ரன்களை கூட்டினார். 19 ஓவரில் பென்ஸ்ட்ரோக் அரை சதம் அடித்துக் கொடுத்து 52 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்து களத்தில் அதிரடி காட்டியது. 19 ஓவர்களில் இங்கிலாந்து தனது இலக்கை அடைந்து டி.20 கேப்பையை வென்றது.

Next Post

குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன்!!-நளினி உருக்கம்…!!

Sun Nov 13 , 2022
குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன் என்று சிறையில் இருந்து வெளியான நளினி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடு்தது வேலூர் ஆண்கள் சிறையில் இருந்து சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவித்தனர். பெண்கள் சிறையில் இருந்து நளினி விடுதலையாகி நேற்று வெளியே வந்தார். பின்னர் அவர் காட்பாடியில் பிரம்மபுரத்தில் உள்ள இல்லத்தில் தங்கினார். […]
#Breaking..!! ராஜீவ் காந்தி கொலை வழக்கு..!! நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like