fbpx

தந்தையுடன் முன்விரோதம்..!! மகனை வெட்டிக்கொன்ற தாயின் கள்ளக்காதலன்..!! தூத்துக்குடியில் பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை விட்டு பிரிந்து, பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். ஆவுடையப்பன் தனது மகன் கணேசனுடன் (24) தனியாக வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றது தொடர்பாக ஆவுடையப்பன் மற்றும் சுடலைமணி இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு டி.எம்.பி. காலனி பகுதியில் ஆவுடையப்பனின் மகன் கணேசன் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன், சம்பவ இடத்திலேயே சரிந்ததும், அவரது நண்பர்கள் கூடுவதை பார்த்து தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடினார். பின்னர் போலீசார் மற்றும் அப்பகுதியினர் கணேசனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், பலன் அளிக்காமல் கணேசன் உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையில், சுடலைமணிதான் கொலை செய்ததும், அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் கணேசனை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

விஜயின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதத்தில்…..! ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…,!

Tue Jun 20 , 2023
நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதத்திலும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் கடத்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் வெற்றிப்பெற்றனர். இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகையை உணர்த்தும் விதத்தில் போஸ்டர்களை ஒட்டி அதை சமூக வலைதளங்களில் […]

You May Like