fbpx

2024 நாடாளுமன்ற தேர்தல்.. மொத்தம் 2100 பார்வையாளர்கள் நியமனம்…! உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்…!

நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான எந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்யுமாறு 2100 பார்வையாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்களை முன்னிட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதற்கான விளக்கக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் இந்த விளக்கக் கூட்டத்தில் இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகள், இந்திய வருவாய் சேவை மற்றும் சில மத்திய சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் என 2150-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகள் மெய்நிகர் முறையில் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எதிர்வரும் தேர்தல்களில் சுமார் 900 பொது பார்வையாளர்கள், 450 காவல் பார்வையாளர்கள் மற்றும் 800 செலவின பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுதந்திரமான, நியாயமான, மிரட்டல் மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஆணையத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் பார்வையாளர்கள் வேட்பாளர்கள் உட்பட அனைத்துத் தொடர்புடையவர்களும் அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.

Vignesh

Next Post

CAA: விஜய்க்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு!… பாஜகவுக்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்?

Tue Mar 12 , 2024
CAA: தமிழ்நாட்டில் திமுக வை பார்த்து CAA சட்டத்தை அமல் படுத்தக் கூடாது என்று சொல்லும் விஜய், இந்த சட்டத்தை செயல்படுத்திய பாஜக வுக்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை கடந்த 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. […]

You May Like