fbpx

உரிமைத்தொகை, நிவாரண நிதி, பொங்கல் பரிசு..!! பணம் கொட்டப்போகுது..!! தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்..!!

சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. என பதிவாகியுள்ளது. 2015இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் சென்னையே மிதந்து வருகிறது. புயலும், மழையும் நின்ற நிலையிலும் ஆங்காங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கழுத்தளவு நீரில் தாமாக வெளியே வருவது எல்லாம் ஆபத்தையே கொடுக்கும் என்பதால் பலர் வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றன.

பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. வெள்ள புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.2,000 கோடியை வழங்குமாறு முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் புயல், கனமழையால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் உரிமைத் தொகையான ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதம் 15ஆம் தேதி வரவு வைக்கப்படாது என தெரிகிறது. டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இல்லாவிட்டால் அடுத்த மாதத்துடன் சேர்த்து வழங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.1000 உரிமைத் தொகை இந்த மாதம் தாமதமாகவோ அல்லது அடுத்த மாதம் சேர்த்து வழங்கினாலோ விமர்சனங்களுக்குள்ளாக நேரிடும் என்பது அரசுக்கு தெரியும். எனவே, அந்த தொகையை தாமதப்படுத்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அது முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி இந்த உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி வந்ததால் அதற்கு முன்னரே உரிமைத் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி, நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அநேகமாக பொங்கலுக்கு சிறப்பு பொருட்கள் ரேஷனில் வழங்கும்போது, இந்த நிவாரணத்தை சேர்த்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

மக்களே..!! காலை 9 மணி முதல்..!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

Sat Dec 9 , 2023
புயல், கனமழை காலக்கட்டங்களில் சென்னையை பொறுத்தவரை, தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் புகுந்துவிடும். ஆனால், இம்முறை மேடான பகுதிகளிலும் சேர்த்தே மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைமை ஏற்பட்டது. நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து வீடுகளில் தேங்கி இருப்பதாலும், இன்னும் வெள்ளம் வடியாமல் மழைநீர் தேங்கி உள்ள சூழலில், கொசு உற்பத்தி அதிகரிப்பதாலும் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் […]

You May Like