பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
* சமையல் எரிவாயு விலை ரூ.418. (மானியம் ரூ.500).
* மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்வு.
* முதியோர்/ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.3,000ஆக உயர்வு.
* குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ரூ.5,000.
* வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ₹1,000 பரிசு.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை.
* மழலையர் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயம்.
* தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு. தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.
* குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.
* கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்.
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
* ஜனவரி, ஜூலை மாதங்களில் தொகுதி – 4 பணிகளுக்கும், பிப்ரவரியில் முதல் தொகுதி பணிகளுக்கும், மார்ச் மாதம் இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும். முதல் தொகுதி பணிகளை தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்.
* புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.
* அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.
* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.